சிரியாவின் பண்டைய நகரான பல்மைரானில் உள்ள மற்றுமொரு பாரம்பரிய சின்னத்தை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு இடித்து தகர்த்துள்ளது.
நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுததாரி கள் பண்டைய வெற்றி வளைவை ‘தூள்தூளாக’ அழித்துவிட்டனர் என்று பல்மையரா நகரில் இருக் கும் செயற்பாட்டாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த சிதைவு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும்.
பண்டைய உலகின் மிக முக்கியமான கலாசார மையம் என்று யுனெஸ்கோ வர்ணித்திருக்கும் இந்த நகரில் உள்ள இரு கோவில்களை ஐ.எஸ். ஏற்கனவே அழித்துவிட்டது.
சிரியாவின் தொல்பொருட்களுக்கான தலைவர் மாமூன் அப்துல் கரீம் இந்த செய்தியை ராய்ட்டருக்கு உறுதி செய்திருப்பதோடு, ஐ.எஸ். தொடர்ந்து அங்கு நிலை கொண்டால் அந்த பண்டைய நகரே அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளார்.
தகர்க்கப்பட்ட இந்த கோபுரம் சிரியாவில் ரோமானி யர்கள் கால்பதித்த வெற்றியை கொண்டாடும் நினைவுச்சின்னமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுக ளுக்கு முன்னதாக கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.