
இன்றுடன் ஐந்து நாட்களாகியும் எந்தவொரு அரசு அதிகாரிகளும் வந்து பார்வையாடாமல்… தமது தேகத்தை பட்டினி போட்டு உருக்கி வரும் நம் உறவுகளின் உடல்நிலை சீரற்றுப் போவதால்… இன்று மருத்துவ அதிகாரிகள் சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார்கள்.
சோதனையின் பின் மருத்துவர்களின் அறிக்கையின்படி அனைவரது உடல்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அறிய முடிகிறது.
ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறை உள்ளதாக கூறும்… தமிழக அரசு தனது ஆட்சியில் உள்ள ஈழத்தமிழரை மெது மெதுவாக முறையற்ற சட்டத்தின்படியும்.. முறையற்ற செயற்பாடுகள் மூலமும கொல்வது ஏன்??? இதுதான் தமிழர் விடயத்தில் காட்டும் கரிசனையா???