
–
பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வழமைபோன்று கல்லூரியின் பிரதம நிர்வாகி செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கோலமிட்டு பொங்கல் இடப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், ஆகியவற்றின் பிரதிநிதிகள், கல்லூரியின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



































