பிரான்சு நாட்டின் மிக முக்கியமானதும், தென்மேற்கு பகுதியில் உள்ள துலுசு நகரத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தமிழர் திருநாளாம் தைப்பொங்கலினை சிறப்பாக கொண்டாடினர். தமிழ் மக்களின் பிராங்கோ தமிழ்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகள் பெற்றோர்கள் துலூஸ் நகர மக்களுடன் இணைந்து பொங்கல் பொங்கியிருந்தனர். கலை கலாச்சார உடைகளுடனும், கலைநிகழ்வுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கல் நிகழ்வு என்பது எந்தவிதமான இனம், சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும், இது தமிழர்களின் ஒரு நாள் என்பதையும், தமிழர்களின் உழவுத்தொழிலுக்கு உதவிடும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரு நிகழ்வு என்பதையும், சிறிய உயிரினங்களுக்கு உணவு இடும் பொங்கல் அரிசிக்கோலம் பற்றியும் மாணவர்களுக்கும், இளையவர்களுக்கும் தமிழ்ச்சோலை ஆசிரியர்களால் விளங்கப்படுத்தப்பட்டது. மாணவர்களான சிறியவர்கள், பெரியவர்கள் பொங்கல் பானையில் அரிசியிட்டிருந்தனர். கலைஞர்கள் பொங்கல் பாடல்களை தேசப்பாடல்களையும் நடனங்களையும் வழங்கியிருந்தனர்
தமிழ்த்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், சின்னஞ்சிறு வயது முதல் விடாது தனது தமிழ்க்கல்வியை 12 ஆம் ஆண்டுவரை முடிந்த மாணவியும் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டார். சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழர்கள் தமது கலைபண்பாடுகளை எங்கிருந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் அதனைப் பேணிப்பாதுகாத்து அதன் அடையாளமாக வாழவேண்டும் என்று இளையவர்கள் கருத்துகளாக இருந்தது. இதற்காக பெரும் உறுதுணையாக இருக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தையும், தமிழ்ச்சோலை ஆசிரியர்களையும், உறுப்பினர்களையும் தமிழர் உலகம் பாராட்டி மகிழ்கின்றது. இந்த உன்னத பணியை மறக்காது கொண்டாடிய துலுஸ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினையும், மக்களையும், தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் தமது பாராட்டுதல்களை வழங்கியிருந்ததோடு விளையாட்டு, கலை, கல்வி போன்ற அனைத்து விடயங்களிலு அங்குவாழும் பலநூறு மக்கள் ஈடுபடவேண்டும் அவர்களின் குழந்தைகளின் திறன்களை அனைத்து வழிகளிலும் முன்கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.