இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கபலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.)
திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று,திருகோணமலை.)
மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் –சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா– வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் –சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
கப்டன் மிரேஸ் (தவராஜா மோகனராஜா –வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா –பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட்மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம்பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு,யாழ்ப்பாணம்.) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்டபோது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை,யாழ்ப்பாணம்.) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமதுஇன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூருகிறோம்.