படிப்பவர் எல்லாம்
புத்தகத்தை மட்டும் அரிக்கும்
கறையான்களா?
நல்லுறவு கொண்டு கூடி மகிழ்வது..
நாட்டுக்கு அபாயமா?
நல்லது கெட்டது தெரிந்து செய்வது
பயங்கரவாதமா?
பிரபாகரனின் பெயர் சொன்னாலே
ஏன் ஐயா பதறுகிறீர்கள்?
பிறக்கும் பிள்ளை ஒவ்வொன்றுமே இனி
அதைத்தான் சொல்லுமே
என்ன செய்வீர் ?
வரலாற்றின் பக்கங்களை
வருங்காலச் சந்ததி
புரட்டிப்பார்க்குமே
என்ன செய்வீர்?..
வன்னியில் சிங்களம்
புரிந்த கொடுமைக்கு
நீதி இல்லையா? ..
நீதி வேண்டாம்..
மனிதம் இல்லையா?..
மனிதம் வேண்டாம்..
மண் புழுவுக்கு காட்டும்
கருணைகூட
எமக்கு இல்லையா?
ஒ..வியட்நாமில்..
மனித உடல்களின்
மண்டை ஓடுகளால்..
அமெரிக்காவுக்கு பாலம்
அமைத்தவர்களால்..
எப்படி
நீதியைப் பெற்றுத் தரமுடியும்?
என்று கேட்கிறீர்களா?
அடக்கு முறைக்கும்
ஒடுக்கு முறைக்கும்
எதிராய்க் கிளர்ந்தெழுந்து
போராடிய..
கிழக்கின் சூரியன் ஒர்தமிழன்
என்று உலகமே எழுதி வைக்குமே..
என்ன செய்வீர்?
வெடிக்கும் உலகத்தின்
விடுதலைப் போர்கள் – இனி
வீரப் பிரபாவின் கொள்கைவழி
வந்தே வெடிக்குமே..
என்ன செய்வீர்?
மண்ணின் விடுதலைக்காய்
போராடி மடிந்த கண்மணிகளுக்கு
கண்ணீரைக் காணிக்கை ஆக்கி
தீபங்கள் ஏற்றுவது குற்றமென்றால்
பெண்ணின் வெறிபிடித்த
சிங்களச் சிப்பாய்கள்
முள்ளி வாய்க்காலில் புரிந்ததெல்லாம்
நாட்டுப் பற்றா?..
நயவஞ்சகரே.. பதில் சொல்லுங்கள்..?
தமிழச்சி என்றால்….
புண்ணில் இருந்து வடியும்
சிதலைக் கூட..
நக்கும்..
புல்லர்கள் எல்லாம்
உங்கள் மண்ணின் மைந்தர்களா?
பொஸ்பரசைக்’ கொட்டி
சொந்த நாட்டின் மக்களையே அழித்த
கோத்தபயா..ராஜபக்சா போன்ற
குள்ள நரிகளெல்லாம் நல்லவர்களா?
சிங்கள அகராதியில்- இதை
குறித்து வைத்துக்
கொள்ளுங்கள்..
நாளை உங்கள் சந்ததி..
தம் ..
பாரம்பரியத்தை..
தம்பட்டம் அடித்துக் கொள்ளட்டும்..
கம் யூனிச’ நாடுகள் என்று -தம்
நாறிப்போன..
கோவணத்தை இன்னும்
மணந்து கொண்டிருக்கும்..
கியூபா..உறஷ்யா..சீனா
எல்லாம்..அமெரிக்காவின் ஏவல் நாய்களா?
பின்பேன்.. இலங்கையின்
இனப் படுகொலைகளுக்கு
ஆதரவு அளிக்கிறார்கள்?
ஆம்….மனிதம்
மரணித்த இடம்…
ஜெனிவா..என்று..
நடுகல் ஒன்றை..
நாட்டிவிட்டு வாருங்கள்..
புலம் பெயர் தமிழர்களே..!
மு.வே.யோகேஸ்வரன்