பிரான்சில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் கொண்டாட்டம்!

0
191

வரும் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Bourse du Travail 9-11 Rue Genin 93200 Saint Denis என்னும் இடத்தில் காலை 11.00 மணிக்கு.
தமிழ்ச்சங்கங்களின் தாய்கட்டமைப்பான தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புஇ ஏனைய தமிழர் நலன் அமைப்புகளுடன் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வை சிறப்பிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
அன்றைய பொங்கல் நிகழ்வில் எமது குழந்தைகளுக்கு அகரம் எழுதுதல் ( ஏடுதொடக்குதலும்) நடைபெறவுள்ளதுடன் பொங்கல் நிகழ்வுகள், மற்றும் தமிழர் கலைநிகழ்வுகளும், சிறப்பு விருந்தினர் வருகையும் என்பன இடம் பெறவுள்ளது. அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தங்களுக்கு தெரிந்த பல்லின மக்களையும் இதில் கலந்து கொள்ள வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here