மிகக்கொடிய சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தைச் சேர்ந்த இளைஞர்கள், நான்காவது நாளாகப் பட்டினிப்போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
தற்போது பட்டினிப்போராட்டத்தைத் தொடரும் இளைஞர்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.