மக்களுக்கு அறிவிக்காமல் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

0
108

தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஒரு சிலரை தனித்தனியாக இரகசியமாக அந்த பேச்சில் என்னபேசப்படுகின்றது என்று எவருக்கும் தெரியாமல் ஜனாதிபதி சந்திக்கின்றார், மகிந்தராஜபக்ச பொன்னாடைபோர்த்தி ஒருவரை சந்திக்கின்றார். ஆனால். மக்களுக்கு அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று அறிவிக்காமல் அந்த பேச்சுக்கள் மூடிய அறைக்குள் நடைபெறுகின்றது.

அங்குதான் உண்மையான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது. அதன் பிற்பாடு ஒட்டுமொத்தமாக உத்தியோகபூர்வமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெறுமெனே நாடகங்களாக மட்டும்தான் இருக்கின்றன என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

05.01.2023 அன்று முல்லைத்தீவு மல்லாவி  பகுதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுடனான சந்திப்பின் போது அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் என்பது தமிழ்த் தேசத்தில் முக்கியமான ஒரு விடையமாகக் கருதப்படவேண்டும்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாங்கள் உங்களுக்கு வேலைசெய்யக்கூடிய அதிகாரம் நிதிவளம் எங்களிடம் இல்லை. இந்த நிலைமையினைப் புரிந்தது போரிற்கு பிற்பாடு அல்ல பல தசாப்தங்களுக்கு முன்னர்.

நாங்கள் பொருளாதாரரீதியில் முன்னேற முயன்றபோது எங்களை அழித்தார்கள் எங்களை தலைதூக்கவிடாமல் மட்டுப்படுத்தினார்கள்.

அந்த நிலையில் இருந்து நாங்கள் வெளியில் வரவேண்டும் என்பதற்காக எங்களை அழித்தார்கள்; கொன்றார்கள். இவற்றை நிறுத்துவதற்கு நாங்கள் எங்கள் பாதுகாப்பினை எங்கள் கையில் எடுத்தபொழுது ஒட்டுமொத்தமாக இனத்தினை அழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள்.

இன அழிப்பு செயற்பாட்டிற்குப் பின்னர் விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் நாங்கள் இன்று இருக்கின்றோம்.

இதுவரைக்கும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தினை செய்யவில்லை. செய்வதற்கு எதுவும் நடக்கவில்லை  சிங்களதரப்பிற்கும் அரசுமீது நம்பிக்கை வைப்பதற்கு எங்களுடைய மக்களுக்கோ தமிழ்தேசத்திற்கோ சிறீலங்கா அரசு எதுவும் செய்து காட்டவும் இல்லை.

இந்த நிலையில் இன்று உலகம் முன்னேறிக்கொண்டு போகின்ற நேரத்தில் தமிழ்த் தேசத்தில் இருக்கக்கூடிய சனத்தொகையில் மிகக்கூடுதலான மாற்றுத்திறனாளிகளுக்கு நாங்கள் பதில்சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் தெற்கில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறி மூன்றாவது தடவையாக பேசுவதற்கு அரசு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

உத்தியோகபூர்வமாக பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதற்கிடையில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஒரு சிலரைத் தனித்தனியாக இரகசியமாக அந்தப் பேச்சில் என்னபேசப்படுகின்றது என்று எவருக்கும் தெரியாமல் ஜனாதிபதி சந்திக்கின்றார். மகிந்தராஜபக்ச பொன்னாடைபோர்த்தி ஒருவரை சந்திக்கின்றார். ஆனால். மக்களுக்கு அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று அறிவிக்காமல் அந்த பேச்சுக்கள் மூடிய அறைக்குள் நடைபெறுகின்றது.

அங்குதான் உண்மையான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது. அதன் பிற்பாடு ஒட்டுமொத்தமாக உத்தியோகபூர்வமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெறுமெனே நாடகங்களாக மட்டும்தான் இருக்கின்றன.

எந்த அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெறுகின்றது என்பதை மூடி மறைத்து இறுதியில் ஒரு நாடகம் நடிக்கின்றவகையில் மட்டும் மேடையினை போட்டு நடக்கின்ற விடையங்கள் மட்டும்தான் இன்றைய பேச்சுவர்த்தையின் நிலை என்றால் எங்களுடைய தேவைகளை உண்மையில் அறிந்து அதற்கு முகம் கொடுத்து அதற்கான தீர்வினை காண்பதற்குரிய நிலைமையினை நாங்கள் பெறப்போகின்றோமா என்ற கேள்விக்கு உங்களுக்கே பதிலினையும் நீங்கள் கூறக்கூடியதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகளை தமிழ்தேசம் எவ்வாறு கவனிக்கின்றதோ எங்களின் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எங்கள் தேசத்தில் இருக்கக்கூடிய அதிகளவில் பாதிக்கப்பட்ட அதிகளவில் தேவைகள் இருக்கக்கூடிய சனத்தொகையின் அங்கத்தினை எப்படி கவனிக்கின்றோமோ அதனைவைத்துத்தான் இந்த மனிதாபிமானத்தினைக் கணக்கிடவேண்டி இருக்கும்.

அதனால்தான் எங்கள் அமைப்பு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போரால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் எங்கள் புலம்பெயர் தமிழ்மக்களிடம் அவர்களின் உதவியினை நாடி இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here