தனிநடனம் கரகப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த வற்றாப்பளை ம.வி. மாணவன்!

0
84

கடந்த 28.12.2022 அன்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான அகில இலங்கை நடன தேசிய மட்ட போட்டியில் தனி நடனம் கரகப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை மகாவித்தியால மாணவன் தியாகராசா ஜயிந்தன் முதலிடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டிகளின் ஆண்களுக்கான தனி நடனம் கரகப் போட்டியில் முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவன் தியாகராசா ஜயிந்தன் அவர்கள் 301 – 1000 இற்கு இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கான போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

இந்த மாணவனுக்கான கரக நடனத்தின் நெறியாள்கை செய்த ஆசிரியை திருமதி ஜஸ்மினி சிவகுமாரன் அவர்களுக்கும் பக்கவாத்திய இசை வழங்கிய ஆசிரியர்கள் திரு கனகரத்தினம் கஜேந்திரன், திருமதி சாந்தகுமாரி கமலகாந்தன் அவர்களுக்கும் பங்குகொண்டு மாணவனின் வெற்றிக்கு உழைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here