
மன்னர் -தலைமன்னார் பிரதான வீதியில் தாராபுரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டிகொட்டைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து பேசாலை நோக்கிப் பயணித்த டிபெண்டர் ரக வாகனமும் பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணமான வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்