
வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க தனது வருடாந்த கிறிஸ்மஸ் உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
உக்ரையினில் நடைபெறும் போரின் பனிக்காற்று மனித குலத்தை தொடர்ந்து உலுக்கிக்கொண்டிருப்பதாக தனது வருத்தத்தை போப் வெளிப்படுத்தினார்.
ஆயுதங்களின் இடிமுழக்கத்தை நிறுத்தவும், இந்த அர்த்தமற்ற போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் வல்லமை படைத்தவர்கள் மீது கடவுள் ஒளி வீசட்டும் என்று அவர் கூறினார்.
