2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை தாக்கத்தில் காவுகொள்ளப்பட்ட மக்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நாடு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை காவுகொண்ட அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையால் உயிரிழந்த மக்களை புதைத்த இடமாகிய புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்திலும் முள்ளியவளை கட்டையடி பகுதியில் அமையப்பெற்ற சுனாமி நினைவாலயத்திலும் மற்றும் முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் முதன்மையாகவும் மற்றும் உயிரிழந்தவர்கள் நினைவாக முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியிலும், உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கள்ளப்பாடு அ.த.க பாடசாலையில் அமையப்பெற்ற நினைவுத்தூபியிலும் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றி திருவுருவப்படங்களுக்கும் நினைவு கற்களுக்கும் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகர்பகுதியில் அமையப்பெற்ற சுனாமி நினைவாலயத்தில் சர்வமத வழிபாட்டுடன் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
பெருமளவான உறவுகள் உயிரிழந்த தங்களின் உறவினர்களுக்கு அஞ்சலிசெலுத்தியுள்ளார்கள்.