இயக்குனர் கு.கணேசன் எழுதி இயக்கிய ”போர்களத்தில்_ஒரு_பூ” திரைப்படம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் திரையிடப்பட்டது.. விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவைச்சேர்ந்த இசைப்ரியா என்ற இளம்பெண் இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் கு.கணேசன் இயக்கி உள்ளார்.
இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சி ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட அத்திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் அவர்கள் அதுகுறித்த பரப்புரையில் ஈடுபட்ட நிலையில் “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் அனுசரணையுடன் ஒக்டோபர் 01ம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் திரையிடப்பட்டது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கும் இராசதந்திரிகளை நேரில் சந்தித்துவரும் இயக்குநர் கணேசன் அவர்கள், சிங்கள இராணுவத்தால் தமிழ்ப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்பதையும் எடுத்துக்கூறிவருகின்றார்.
உணர்வாளரும் இயக்குநருமான கணேசன் அவர்கள் அது குறித்த துண்டறிக்கையினையும் வழங்கினார். அவர் சந்தித்த இராசதந்திரிகள் ஆர்வத்துடன் விடையங்களை செவிமடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடுவதற்கான அனுமதி உள்ளிட்ட ஏற்பாடுகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மேற்கொண்டது.