
பிரான்ஸின் லியோன் நகருக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் ஐந்து சிறுவர்கள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (16) ஏற்பட்ட இந்தத் தீ ஏழு மாடிகள் கொண்ட அடுக்கு மாடியிலே பரவியுள்ளது. இதில் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட பத்துப் பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
170 தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ பரவியதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் கெரார்ட் டர்மனின் குறிப்பிட்டார். இதில் மூன்று தொடக்கம் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ மேல் மாடிகளை நோக்கி பரவியுள்ளது.