முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை சிறிலங்கா கடற்படை முகாமிற்காக சுவீகரிக்கும் நோக்கில் நடைபெறவிருந்த அளவீட்டுப் பணிகளை எதிர்த்து நேற்றையதினம் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது முல்லைத்தீவு அரச அதிபரிடம் காணி அபகரிப்பை தடுத்துநிறுத்துமாறு கோரி கோரிக்கை கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது.
இவ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.