சொந்த மண்ணுக்குச் செல்லும் எதிர்பார்ப்பு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது: ஒட்டகப்புல மக்கள் இரா.சம்பந்தரிடம் விசனம்!

0
237

imgresஒட்டகப்புலம் பகுதியில் 100 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் என வெளியான செய்தி அறிந்து சொந்த மண்ணுக்குச் செல்லும் ஆவலுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் வந்த எமக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது என ஒட்டகப்புல மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் முதன் முறையாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இரா.சம்பந்தன் இன்று மத வழிபாடுகளை தொடர்ந்து ஒட்டகப்புலம் மக்களை சந்தித்தார். அதன்போதே மக்கள் இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மக்கள் மேலும் கூறுகையில்,

எங்களுடைய சொந்த நிலங்களை விட்டு உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது தேவாலயத்தை மட்டும் விடுவித்துவிட்டு எங்கள் கிராமத்தையே முட்கம்பியால் சுற்றி அடைத்து வைத்துள்ளார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒட்டகப்புல மக்களின் சார்பில்மகஜர் ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here