
பிரான்சில் கொவிட் 19 தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 40 வீதத்தால் கொவிட் 19 தொற்று அதிகரித்ததாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். அதையடுத்து, கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுபோக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிய மருத்துவத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், பொது போக்குவரத்தில் கட்டாய முகக்கவசம் அணிவதற்கு பொதுமக்களில் நான்கில் மூவர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Odoxa poll நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. 76 சதவீதமானவர்கள் முகக்கவசம் அணிய தயாராக இருப்பதாகவும், அவர்களில் 58% சதவீதமானவர்கள் ‘கட்டாய முகக்கவசம்’ எனும் கட்டுப்பாட்டுக்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மேற்படி கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,005 பேர் கலந்துகொண்டனர்.