பிரான்சு சுவாசிலே றுவா தமிழ்ச்சோலைப் பள்ளியின் 13 ஆவது ஆண்டு விழா!

0
312

பிரான்சு சுவாசிலே றுவா 13 ஆம் ஆண்டுவிழா கடந்த 10.12.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், அக வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்ச்சோலைகீதம் இசைக்கப்பட்டு வரவேற்புரை மற்றும் தலைமை உரைகளைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன.

சுவாசி லே றூபா நகர துணைமுதல்வரும் கலந்து சிறப்பித்திருந்தார்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கியிருந்தார்.

இந்த ஆண்டு திடீரென் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் குறிப்பாக வன்னிப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் கடும் குளிரும் மக்கள் நம்பியிருந்த ஐந்தறிவு சீவன்களின் உயிர் இழப்பு, வாழ்வதாரங்கள் அழிந்தமை பற்றியும் அவர்களுக்கு உடனடியாக உதவிடவும் உங்களை புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் தமிழ் மக்கள் நாம் மறக்கவில்லை எம்மால் முடிந்த உதவியை செய்வோம் என்ற வகையில் சிறி துளியாக அது பெருவெள்ளமாக எம்மவர்களுக்கு உதவிடும். எனவே முடிந்தளவு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டிருந்தார் இந்த உதவி சுவாசிலே றுவா பிராங்கே தமிழ்ச்சங்கமே இந்த ஆண்டு ஆரம்பித்திருக்கின்றது என்றும் இதன் தொடராக மக்கள் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறிய நேரத்தில் சேகரிக்கப்பட்ட பணம் எண்ணப்பட்டு பிராங்கோ தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் கைகளில் சுவாசிலே றுவா தமிழச்சங்கப் பொருளாளரால் கையளிக்கப்பட்டது.
அடுத்து இன்று சர்வதேச இணையத்தளங்களில் தமிழ் மக்களுடைய கடந்த கால உண்மையின் வரலாறுகள்,படங்கள், ஆவணங்கள் அழிக்கப்பட்டு வருவதும், ஆக்கங்களை போடமுடியாத நிலைகள் இன்னும் பல தமிழினம் மீது மேற்கொள்ளப்படும் தவறான பரப்புரைகள் இருக்கின்ற தலைமுறையையும், வரும்கால தலைமுறையினரையும் பெரிதும் மனவுழைச்சலுக்கும், மனத்துன்பத்துக்கும் ஆளாக்குகின்றது என்றும், சனநாயக உரிமைபேசும் நாடுகள் சனநாயக உரிமைகளை பொய்யானவர்களின் பரப்புரைகளுக்குத் துணை போகின்றமை வேதனையை தருகின்றது என்றும். 74 ஆண்டுகள் தமிழர்கள் நாம் தான் எல்லாவழிகளிலும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றோம். போர் பெரும் இனஅழிப்பு நடந்து முடிந்து கடந்த 13 ஆண்டுகளின் பின்பும் இந்த இணையவழியில் எமது இனத்தையும் அதன் உரிமையையும் மறுப்பதுவும் அதனை பார்த்துக்கொண்டு எந்தவிதமான மாற்று நடடிவடிக்கையும் எடுக்காது நாம் வாழாதிருப்பதும் அவர்களின் செயலுக்கு துணைபோவதாகவே பார்க்கவேண்டியுள்ளது எனவும். இந்த நாட்டிலும்சரி உலகமெங்கும் வாழும் எம் அடுத்த தலைமுறை சிறந்த சட்டவாளர்களாக, நீதிமான்களாக, அரசியல் விஞ்ஞானம் கற்பவர்களாக கல்வி கற்கின்றார்கள், பணியாற்றுகின்றார்கள். இவர்கள் யாவரும் ஒன்றிணைந்து எமது மொழிக்கும், இனத்துக்கும், அதன் உண்மை வரலாற்றிற்கும் ஏற்படும் தடைகளை சட்டரீதியாக எதிர்கொள்ள இதனை ஆளுமை கொண்டவர்கள் முன்னெடுக்கும் போது அவர்களுக்கு இவர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here