உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் நேற்று முன்தினம் அமெரிக்காவிற்குச் சென்று ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருவரும் போரில் உக்ரைன் வெற்றி பெறுவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி பூண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஜோ பைடன், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப்பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான ஜோ பைடனின் நிபந்தனையை புடின் நிராகரித்தார். மேலும் உக்ரைன் மீதான போர் தவிர்க்க முடியாதது என்றும் தாக்குதல் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்தோடு மேற்கத்திய நாடுகளின் அழிவுகரமான கொள்கைகளே போருக்கு வித்திட்டதாகவும், ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் இருந்து வந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கான பதில் என்றும் அவர் சாடியுள்ளார்.