பிரான்சு லியோன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2022 நிகழ்வு!

0
118

மாவீர்ர் நாள் 2022 Lyon நகரம் பிரான்சு
27 /11/2022 மாலை 18h05 மணிக்கு செல்வி தனுஸிகா விக்னேஸ்வரன் என்பவரின் தொகுப்புரையுடன் மண்ணின் விடிவிற்காக மரணித்த மாவீர ர்களுக்காக அகவணக்கம் செலுத்தி தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து பொது சுடரினை லெப்டினன் கேணல் மூர்த்தி அவர்களின் துணைவியார் திருமதி சுகந்தி அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை லியோன் தமிழ்ச்சங்க உப தலைவர் திருவாளர் இந்திரகாந்தன் ஏற்றிவைத்தார். மாவீரர்களின் உறவினர்களாலும், பொதுமக்களாலும் மலர்வணக்கம் செலுத்தி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் கிளையின் அங்கத்தவர் பிரான்சிஸ் அமலதாஸ் மாவீரர்களின் ஈகத்தைப் பற்றி சொற்பொழிவாற்றினார்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக பல உலக அரங்குகளில் குரல் கொடுத்த. மிகவும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் யூலியா மாஸ்ரர் அவர்களின் சிறப்புரை நிகழ்வின் மையமாக அமைந்தது.லியோன் தமிழ் சங்கத்தின் புதிய அங்கத்தவர்கள் தேர்வு இடம்பெற்று சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.

நிறைவாக நன்றியுரை, உறுதிமொழி லியோன் தமிழ் சங்கத்தின் பொருளாளர் திருவாளர் தனு வழங்கினார் .இடை இடையில் சிற்றுண்டிகளும் . தேனிரும் அமைப்பாளர்களான திருவாளர்கள் நித்தி, சிறி,குட்டி, சோருபன் போன்றவர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.உணர்வு பூர்வமாக லியோன் வாழ் பொதுமக்கள் இரவு 20h30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here