தமது தந்தையரை விடுதலை செய்யக் கோரி பிள்ளைகள் யாழ். செயலகத்திற்கு முன்னால் போராட்டம் !

0
169

CQIMGWsUkAAhYBi

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான தமது தந்தையரை விடுதலை செய்யக் கோரி, பிள்ளைகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிறுவர் தினவாரம் தற்போது அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டே தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் எனது தந்தையை விடுவியுங்கள், எனது தந்தையை கட்டியணைக்க விருப்பம், எனது தந்தைய முத்தமிட விருப்பம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் அங்கிருந்து வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது தந்தையரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
lyio

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here