“சிறுவர் துஸ்பிரயோக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கு”: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

0
547

சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் மற்றும் சிறுவர் மீதான வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என வலியுறுத்தி வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
20150930_095954-e1443615404142

இன்று புதன்கிழமை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

20150930_100012
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, எம்.பி.நடராசா, இ.இந்திரராசா உட்பட அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

20150930_100019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here