“பிள்ளைகளை உயிர்போல் காப்போம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை!

0
161

IMG_0002-e1443612659637
“பிள்ளைகளை உயிர்போல் காப்போம்” என்னும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நாடெங்கிலும் நடாத்தப்பட்டுவருகின்றன.

அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துச்செல்லும் சிறுவர்கள் மீதான வன்முறையினை தடுக்கும் வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த விழழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
IMG_0006
மண்முனை தென் எருவில் பற்று இளைஞர் சம்மேளன தலைவர் இ.வேணுராஜ், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர் ஜே.கலாராணி, மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், களுவாஞ்சிகுடி, தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள், என பலரும் காலந்து கொண்டிருந்தனர்.

IMG_00101

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழிப்புணர்வுப் பேரணி களுவாஞ்சிகுடி அற்புதப்பிள்ளையாரடி வரைக்கும் சென்று மீண்டும், பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.

இதன்போது நாங்கள், பச்சிளம் பாலகர்கள், எங்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தாதீர்கள், ஐயோ எனக்கு அடிக்காதீர்கள், தாய்மார்களே எங்களைவிட்டு வெளிநாடு செல்லாதீர்கள், அம்மா, அப்பா எங்களோடு இருங்கள், போன்ற வாசகங்கள் பொறிக்கபட்ட பதாகைகளை மாணவர்கள், ஏந்திவாறு இப்பேரணியில், ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here