பிரான்சு சார்சல் பகுதியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2022 நினைவேந்தல்!

0
428

 –

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சார்சல் – 95 மாவட்டத்தில்
தமிழீழ விடுதலைப்போரிலே முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களுடைய நினைவுக்கல்லின் முன்பாக தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், தாயகச்செயற்பாட்டாளர்கள் இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர், மாநகரமுதல்வர், முக்கியஸ்தர்களோடு
13h15 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் சிறிதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
பிரெஞ்சுத் தேசியக் கொடியினை சார்சல் மாநகரசபை முதல்வர் மதிப்புக்குரிய பற்றிக் கடாற் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து சரியாக 13:35 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டது. தொடர்ந்து 13:36 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் 13:37 மணிக்கு – துயிலுமில்லப்பாடல் இசைக்க ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

ஈகைச்சுடரினை
மாவீரர் லெப்.கேணல் விக்ரர் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மலர் வணக்கம் இடம் பெற்றது.

லெப். சங்கர் அவர்களுடைய நினைவுக்கல்லிற்கான மலர்மாலையினை பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் Carlos Martens Bilongo அணிவித்தார்.
பிரமுகர்கள் மலர் வளையங்கள் வைத்து மதிப்பளித்தலைச் செய்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திரு.பிரன்சுவா பொப்பினி அவர்கள். சார்சல் மாநகர சபை நகரபிதா திரு. பற்றிக் கடாற் அவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் வணக்கம் செய்திருந்தனர்.
நினைவு உரைகள் இடம்பெற்றன.

தேசியக்கொடிகள் முறையே இறக்கி வைக்கப்பட்டன
” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’ உறுதியோடு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here