கல்லறை தழுவிடும்
காற்றே வருக..
காவிய நாயகர்
கதையினை பகர்க…
அஞ்சாது பகையழித்து
அடுக்கடுக்காய் வெற்றி தந்து
வெஞ்சமரில் உயிர்தந்த
குஞ்சுகளின் நிலைகூறு..
கொஞ்ச நாளாயவர்
குழி தொழ வழியில்லை…- அங்கு
நெஞ்சுருகி நமழுது
நெய் விளக்கும் ஏற்றவில்லை…
எப்படியுள்ளனர்
எங்களின் பிள்ளைகள்..
வானமே கூரையாக
வெண்ணிலவே விளக்காக..
அவர் துயிலும் இல்லங்கள்..
அருகிருந்தும் அண்ட முடியவில்லை..-ஆனாலும்
அவர்களை எம்மனதிலன்றோ
அடைகாத்து வைத்துள்ளோம்..
அதனை அவர்களுடன் இந்த
அகிலமும் அறியும்…
ஆனாலும் ஒரு நாள்
அவர்வாசல் வருவோம்…
அகத்தில் பூரிப்புடனும்
ஆயீரம் நினைவுடனும்
கையிலே கார்த்திகை மலருடனும்
கண்மணிகளை காணவருவோம்.
என்று சொல்லு..
விரைவில் வருவோம்..
எங்களுக்கு வேலிகள் போடமுடியாது…
நவம்பர்27
***
,படம் : சாட்டி துயிலுமில்லம்
2018