பிரான்சு ஈழத்தமிழர் துடுப்பாட்டச் சம்மேளன அனுசரணையுடன் பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை மூன்றாவது தடவையாக நடாத்திய கேணல் பரிதி (றீகன்) அவர்களின் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த (27.09.2015) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு கிறித்தை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 26.12.2007 நெடுந்தீவுக்கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தை பிரான்சு ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனத் தலைவர் அப்பன் அவர்கள் செலுத்தினார்.
இந்நிகழ்வில் 16 கழகங்கள் பங்குபற்றிச் சிறப்பித்தன. வெற்றிபெற்ற கழகங்களினது விபரம் வருமாறு:-
1ம் இடம் : ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம் பிரான்சு
2ம் இடம் : லெவன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் பிரான்சு
3ம் இடம் : தமிழர் விளையாட்டுக்கழகம் 93 பிரான்சு
நிகழ்வின் நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்துவைக்கப்பட்டன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.