எமது உறவுகளான மாவீரச்செல்வங்களை ஒரு சேர நினைவுகூரும் அந்த நாளுக்காக அவர்கள் துயில்கின்ற துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன.. இது தாங்கள் அறிந்ததே…
அந்த உன்னத பணிக்காக நாமென்ன பங்காற்றினோம் என நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ளுவோம்.. வெறுமனே முகநூலிலே முகப்பிலே கார்த்திகைப் பூவினையும் தீபத்தினையும் பதிவேற்றினால் மட்டும் போதுமா.. நமக்கென ஒரு சந்தர்ப்பம் நம் அயலிலேயே நமக்கு கிடைத்துள்ளது… இம்முறை அந்த இடைவெளி நமக்கு கிடைத்துள்ளது.. அதனை சரியாக பயன்படுத்துவோம்… அந்தக் கால நாட்கள் போல இந்தநாட்கள் வந்துள்ள.. அந்த இல்லத்துள் கால் பதிக்கும் போது கிடைக்கும் இன்பத்தை அள்ளிப்பருகும் அரிய சந்தர்ப்பமிது…
அன்று விளக்கேற்ற போவோம் தானே..
பிறகென்ன..
உண்மைதான்.. அது ஒருநாள் ஆனந்தமன்றோ.. அதைவிட..
ஆள்கூடி அவர்களது இல்லங்களை தூய்மைசெய்து.. அழகழகான இரு வர்ணக்கொடியினாலே அலங்கரித்து…
ஆளும் பேருமாக பந்தம் சுற்றி…
ஆயிரம் தீபமேற்றும் அந்த நாளுக்காக கூடிப்பணி செய்தல்….
கோடி இன்பம் தரும்..
அந்த நாளில் நாம் வாழ்ந்த அரிய வாழ்க்கை.. நினைவில் வந்து நெஞ்சு நிறைக்கும்…
ஆதலால்..
யாவரும் ஒரு கணம் நில்லுங்கள்…
அருகிருக்கும் துயிலுமில்லம் தனை நாடிச்செல்லுங்கள்…
உங்களுக்காக பணியங்கு ஓராயிரம் உள்ளது…
வீண்பேச்சு விட்டு வேலையில் இறங்குங்கள்…
இது எங்களுக்கான பணி..
நாம் வாழ நமக்காக உயிர்தந்த நாம்மவரை நாயகரை..
தொழுதேற்றும் நாளுகாகாக
துயிலுமில்லம் தயார்செய்வோம்..
எங்கள் தலைமுறைக்கும் இதையுணர்த்தி..
வரலாறு சொல்லுவோம்…
இது நமது பணி..