தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுதலை கோரி களமிறங்கியுள்ள சிறார்கள்!

0
184

priதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பினில் புதிய அரசும் கூட்டமைப்பும் மௌனம் காத்துவரும் நிலையில் சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, சிறார்களும் களமிறங்கியுள்ளனர். அவ்வகையில் எதிர்வரும் புதன்கிழமை யாழினில் ஊர்வலமொன்றை நடத்தி வடக்கு முதலமைச்சரிடம் மகஜரொன்றையும் அவர்கள் கையளிக்கவுள்ளனர்.

இதனிடையே வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர். தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர்.

நல்லாட்சியில் நல்வாழ்வு கிடைக்குமா? சிறுவர் நாமே?, அப்பாவின் நீண்ட சிறையால் வாழ்வை இழந்து தவிப்பது நாமே!, போன்ற சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அண்மைக்காலமாக அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here