தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் போட்டிகளின் இறுதிப்போட்டி கடந்த 19.11.2022 சனிக்கிழமை கொலோம்ப் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவோடு கொலோம்ப் (Colombes) நகரில் நடைபெற்றது .
தமிழ்ச்சோலை மட்டத்தில் முதலிடம் பெற்று , தொடர்ந்து திணைக்கள மட்டங்களிலும் முதலிடம் பிடித்த 76 மாணவர்கள் நாடுதழுவிய இறுதிப்போட்டியில் பங்குகொண்டிந்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகத்தோடு போட்டிகள் தொடங்கின.
திருவாட்டி சரஸ்வதி மகேந்திரராசா (ஆசிரியர் பயிற்றுநர்) ,
திருவாட்டி ரஜனி சாந்தகுமார் (கலைமாணி)
திருவாட்டி யசோதா தர்மலிங்கம் (கலைமாணி) ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பையும் கணினிப்பதிவுகளையும் தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக மாணவர்கள் நேர்த்தியாக மேற்கொண்டிருந்தனர்.
அதிபாலர் பிரிவு, பாலர்பிரிவு, கீழ்ப்பிரிவு, நடுவண் பிரிவு-அ, நடுவண் பிரிவு-ஆ, மேற்பிரிவு-அ, மேற்பிரிவு-ஆ, உயர்பிரிவு, அதிஉயர் பிரிவு ஆகிய
ஒன்பது பிரிவுக்களுக்கான போட்டிகளும் 15.00 மணியளவில் நிறைவுற்று முடிவுகள் உடனேயே அறிவிக்கப்பட்டன.