சாவகச்சேரியில் வழிப்பறித் திருடர்கள் தப்பியோட்டம்: மக்களுக்கு எச்சரிக்கை!

0
71


நேற்று 18.11.2022 வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலை முடிந்து மகனை மிதியுந்தில் வீட்டுக்கு கூட்டிச் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு கத்தியை காட்டி சங்கிலியை களவாட முயன்ற போதிலும்
பெண்ணின் சமஜோசித முயற்சியினால் கள்வர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இது பற்றி தெரிய வருவதாவது நேற்று மதியம் பாடசாலையில் இருந்து மகனை அழைத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் வீடு சென்று கொண்டிருந்த பெண்ணை கல்வயல் புலுட்டையன் கோவில் சந்தியில் வழிமறித்த உந்துருளியில் பின் தொடர்ந்த இருவரில் ஒருவன் இறங்கி கத்தியைக் காட்டி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கழற்றுமாறு கேட்டுள்ளான்.

இந்த சந்தர்ப்பத்தில் மிதியுந்தில் இருந்த மகன் அழுகுரல் கேட்டு எதிர் வீட்டுப் பெண் கேற்றினூடாக எட்டிப் பார்த்த போது திருடன் கத்தியைக் கொண்டு அப் பெண்ணை உள்ளே செல்லுமாறு துரத்தியுள்ளான். அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இப் பெண் தனது சங்கிலியை புல்லுக்குள் எறிந்துள்ளார். உடனே சங்கிலியை எடுக்க முடியாமையினால் அவன் உந்துருளியில் ஏறி மற்றவனுடன் தப்பித்துள்ளான். கத்தியுடன் தப்பித்து செல்லும் திருடர்கள் பயணித்த உந்தருளி அருகில் உள்ள கண்காணிப்புக் காணொளிகளில் பதிவாகி இருந்தது.

இவர்கள் பயணித்த உந்துருளி ஏற்கனவே நெல்லியடிப் பகுதியில் திருடப்பட்டது என அறிய முடிகிறது. உந்துருளி திருட்டுத் தொடர்பில் அந்தப் பிரதேச காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை. இந்த உந்துருளியைப் பயன்படுத்தி அவர்கள் மேலும் திருட்டுக்களில் ஈடுபட முடியும். எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். NP BGX 7266

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here