தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் மூன்றாவது ஆண்டாக கடந்த வார இறுதி நாளில் நடாத்தப்பட்ட தாயக வரலாற்றுத் திறனறிதல்
தமிழ்த் தேசிய போராட்ட வரலாற்றையும் அதன் வீச்சையும் இளந்தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திறனறிதல் மாணவரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை பங்குகொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து அறிந்துள்கொள்ளமுடிகிறது.
தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 10,11,12 கற்கும் *மொத்த மாணவர்களில் 81 * விழுக்காட்டினர் இத்திறனறிதலில் பங்குகொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டுகளைவிட 18 விழுக்காடு அதிகமானதாகும்.
ஆர்ஜொந்தை (Argenteuil) தமிழ்ச்சோலையைச் சேர்ந்த *அருளானந்தம் ஜெசிக்கா *மற்றும் *வில்நெவ் சன் ஜோர்ஜைச் *(Villeneuve St George) தமிழ்ச்சோலையைச் சேர்ந்த *சாள்ஸ் ஆன் ஆராதனா * ஆகிய இரு மாணவியர் இத்திறனறிதலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை பொதுமக்களும் *தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களும் * இத்திறனறிதலில் பங்குகொண்டு இயங்கலையூடாக உடனடிச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.
முன்னைய ஆண்டுகளைவிட பல்வேறு மட்டங்களுக்கும் இத்திறனறிதல் சென்றடைந்துள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உலகின் *பல்வேறு நாடுகளிலுமிருந்து பங்குகொண்டதாகவும் * தமிழ்ச்சோலை தலைமைப் பணியக வட்டாரங்கள் ஊடாக அறியவருகிறது.
திறனறிதலில் *அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மாவீரர் நிகழ்வு மேடையில் மதிப்பளிக்கப்பட்டு பரிசளிக்கப்படவுள்ளார்கள் * என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.