இலங்கை தமிழர் படு கொலையில் நீதியை அழிக்க உள்நாட்டு விசாரணை என துரோகம் செய்யும் அமெரிக்காவை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ம.தி.மு.க., மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.இந்த போராட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கி னார். துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கோவை ராமகிருஷ்ணன், சத்திரியன் வேணுகோபால், மணிமாறன் உள்பட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் முன் னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.அங்கிருந்து முற்றுகை போராட்டத்துக்கு சென்ற வைகோ உள்பட அனை வரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டம் குறித்து வைகோ கூறியதாவது:-
இலங்கையில் 2009-ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதை வன்மை யாக கண்டிக்கிறோம். இந்த போராட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் தீர்மான மாக கொண்டு வந்ததை அமுல்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளும் இலங்கை இனப்படுகொலை விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள் பின்வருமாறு:-
“முற்றுகை போர் முற்றுகை போர்
ஈழ விடுதலையை அழிக்க துடிக்கும்
அயோக்கிய அமெரிக்க தூதரகம்
முற்றுகை போர் முற்றுகை போர்
எதிர்கிறோம் எதிர்க்கிறோம்
ஈழ விடுதலைக்கு எதிரான
அமெரிக்காவின் தீர்மானத்தை
தமிழர்கள் நாங்கள் எதிர்க்கிறோம்
ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்
ஒன்றுபட்ட இலங்கை என்பதை
ஒருபோதும் ஏற்கமாட்டோம்
அயோக்கிய அமெரிக்காவே
தலையிடாதே தலையிடாதே
தமிழீழ விடுதலையில் தலையிடாதே
தடுக்காதே தடுக்காதே
தமிழீழ விடுதலையை தடுக்காதே
தமிழர்களை இனப்படுகொலை செய்ய
வியூகம் வகுத்த அமெரிக்காவே
ஆயுதம் கொடுத்த இந்தியாவே
மவுனம் காத்த ஐ.நா மன்றமே
ஆதரவு கொடுத்த இங்கிலாந்தே
மூடி மறைக்காதே மூடி மறைக்காதே
இனப்படுகொலையை மூடி மறைக்காதே
தொடராதே தொடராதே
கலப்பு விசாரணை என்ற பெயரில்
உள்நாட்டு விசாரணை மூலம்
இனப்படுகொலையை தொடராதே
கலப்பு விசாரணை கேட்கவில்லை
உள்நாட்டு விசாரணையை கேட்கவில்லை
சர்வதேச விசாரணை கேட்கிறோம்
இனப்படுகொலை இனப்படுகொலை
அறுபது ஆண்டு காலமாக
தமிழர்கள் மீது நடத்தியது
திட்டமிட்ட இனப்படுகொலை
போர் குற்றமல்ல போர்குற்றமல்ல
மனித உ ரிமை மீறல் அல்ல
திட்டமிட்ட இனப்படுகொலை
நீதி வேண்டும் நீதி வேண்டும்
இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்
இனப்படுகொலைக்கு நீதி என்பது
விடுதலையே விடுதலையே
தமிழீழ விடுதலையே
வல்லாதிக்க அமெரிக்காவே
சுரண்டி கொழுத்த இங்கிலாந்தே
தமிழர் விரோத இந்தியாவே
உள்நாட்டு விசாரணை அமைக்க
நடந்தது என்ன தெரு சண்டையா??
இனப்படுகொலை இனப்படுகொலை
ஏற்கமுடியாது ஏற்கமுடியாது
புலிகள் மீதும் விசாரணை என்பதை
ஏற்கமுடியாது ஏற்கமுடியாது
ஐ.நா மன்றமே அயோக்கிய மன்றமே
அமெரிக்காவின் அடியாள் மன்றமே
திரும்பபெறு திரும்பபெறு
புலிகள் மீதான அவதூறுகளை
உடனடியாக திரும்பப்பெறு
பிரதிநிதிகள் பிரதிநிதிகள்
தமிழீழ விடுதலை புலிகள்
தமிழர்களின் பிரதிநிதிகள்
அவமதிக்காதே அவமதிக்காதே
தமிழர் பிரதிநிதிகளை அவமதிக்காதே
தடை நீக்கு தடை நீக்கு
புலிகள் மீதான தடையை நீக்கு
விசாரணை வேண்டும் விசாரணை வேண்டும்
இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும்
சர்வதேச விசாரணை வேண்டும்
கொன்றுகுவித்த இலங்கை மீதும்
வியூகம் வகுத்த அமேரிக்கா மீதும்
ஆயுதம் கொடுத்த இந்தியா மீதும்
ஆதரவு கொடுத்த இங்கிலாந்து மீதும்
சர்வதேச விசாரணை வேண்டும்
இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும்
ஐ.ந மன்றமே ஐ.நா மன்றமே
பொதுவாக்கெடுப்பு நடத்து பொதுவாக்கெடுப்பு நடத்து தமிழீழ விடுதலைக்கான
பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து
எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம்
13வது சட்டத்திருத்தத்தை
அயோக்கிய அமெரிக்க தீர்மானத்தை
தமிழர்கள் நாங்கள் எதிர்க்கிறோம்
ஒரே தீர்வு இறுதி தீர்வு
தமிழீழ விடுதலையே
ஒரே தீர்வு இறுதி தீர்வு
தீர்வாகாது தீர்வாகாது
விடுதலை தவிர்த்த எந்த தீர்வும்
இனப்படுகொலைக்கு தீர்வாகாது
சமரசமில்லை சமரசமில்லை
தமிழீழ விடுதலையில்
ஒருபோது சமரசமில்லை
மறக்க மாட்டோம் மறக்கமாட்டோம்
இனப்படுகொலையை மறக்கமாட்டோம்
மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்
இனப்படுகொலையில் பங்கெடுத்த
இந்திய இங்கிலாந்து அமெரிக்காவை
தமிழர்கள் நாங்கள் மன்னிக்க மாட்டோம்
போர் தொடுப்போம் போர் தொடுப்போம்
பயங்கரவாத அமேரிக்கா மீது
பொருளாதார போர் தொடுப்போம்
புறக்கணிப்போம் புறக்கணிப்போம்
அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
kfc உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை
தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிப்போம்
down down america
up up tamil eezam
we reject hybrid mechanism
we reject domestic investigation
we want international investigation
conduct referendum
we want tamil eezam
we want tamil eezam
ஏகாதிபத்திய அமெரிக்காவே
வெளியேறு வெளியேறு
தமிழர் பெருங்கடலை விட்டு வெளியேறு
தமிழீழத்தை விட்டு வெளியேறு
அனுமதிக்க மாட்டோம் அனுமதிக்க மாட்டோம்
தமிழர் பெருங்கடலில் நுழைவதற்கு
வல்லாதிக்க நாடுகளை அனுமதிக்க மாட்டோம்
கொளுத்துவோம் கொளுத்துவோம்
அமெரிக்க தீர்மானத்தை கொளுத்துவோம்
வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழர் போராட்டம் வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்
ஓயமாட்டோம் ஓயாமாட்டோம்
தமிழீழம் கிடைக்கும் வரை
தமிழர்கள் நாங்கள் ஓயாமாட்டோம்
ஐ.நா மன்றமே அமெரிக்காவே
மதித்திடு மதித்திடு
தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தை
மதித்திடு மதித்திடு
தமிழர் இறையான்மையை மதித்திடு”