பிரான்சில் தமிழ் ஆசிரியர்களை மெருகேற்றிய இரண்டாம் நாள் ஆசிரியர் செயலமர்வு!

0
353

!
பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ் ஆசிரியர்களுக்கான செயலமர்வு, 23.10.2022 அன்று கொலோம்ப் நகரில், கொலோம்ப் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.
இரண்டாம் தொகுதியான வளர்நிலை 6 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையான செயலமர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.
காலை 9.30 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு. நாகஜோதிஸ்வரன் தலைமையில் அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வானது மாலை 18.00 மணியளவில் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் நிறைவடைந்தது.


வரவேற்புரையை செயலாளர் திரு. காணிக்கைநாதன் வழங்கியிருந்தார்.
தமிழ் ஆசிரியர்களால் மண்டபம் நிறைந்திருக்க, 8 ஆசிரியப் பயிற்றுநர்கள் பயிற்றுரையை வழங்கினர்.
ஆசிரியவாண்மையை திருவாட்டி கமலாவதி கைலாயபிள்ளை அவர்களும், கட்டுரை, கவிதையாக்கம் தொடர்பாக திருவாட்டி ஜெயராணி புஸ்பகுணபாலசிங்கம் அவர்களும், நயம்கொண்ட தமிழ் இலக்கியங்கள் எனும் தலைப்பில் திருவாட்டி உதயராணி திருச்செல்வம் அவர்களும், இலக்கணப்பகுதியை திருவாட்டி தயாபரி கண்ணதாசன் அவர்களும், இல்லறவியலில் இலக்கியப்பாங்கு எனும் தலைப்பில் கலாநிதி சிவஞானம் தனராஜா அவர்களும், பிற்காலச்சோழரும் ஈழத்திருநாடும் எனும் தலைப்பிலான வரலாற்றுப் பகுதியை திருமிகு கிருஸ்ணபிள்ளை தவராசா அவர்களும், பதின்ம வயது உளவியலும் கற்பித்தல் உத்திகளும் எனும் தலைப்பில் திருவாட்டி கவிதா ஆடியபாதம் அவர்களும், நிகழ்கால வரலாறு பற்றி திருமிகு வினாசித்தம்பி மோகனதாசன் அவர்களும் பயிற்றுரைகளை வழங்கியிருந்தனர்.
உணவு இடைவேளையைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்திறனூடு ஆசிரியர்களின் வாண்மையை மேம்படுத்தும் நோக்கில் இணைய வழித்தேர்வு ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்டது.
பாடப்பரப்பு தொடர்பான குழுச்செயற்பாட்டில் இளந்தலைமுறை ஆசிரியர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
நிகழ்ச்சிகளை தமிழ் இணைய கல்விக்கழகப் பேராசிரியர் திரு.சி. தனராஜா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பினை தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக்கல்வியின் இளந்தலைமுறை மாணவர்களே முன்நின்று செய்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here