
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலம்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அஜாகரி (வயது 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே மரணமடைந்தவர்களாவர்.
சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.