திட்டமிட்டு பிரிக்கப்படும் தமிழ் பிரதேசங்கள்!

0
247




!

இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் தமிழீழத் தமிழினம் தம் மீதான இனப்படுகொலைச் சாட்சியங்கள் சர்வதேசத்தின் முன்பதிவிடுவதற்கான அறிவுறுத்தல் : தமிழீழ மக்கள் பேரவை -பிரான்சு

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஈழத் தமிழினத்தவர்கள்; திட்டமிட்ட ஓர் இனப்படுகொலைக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல்வேறு வடிவங்களில் தமிழின அழிப்பு
நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில், மகாவலி திட்டமிடல் ஊடாகவும், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கிராமங்கள் சிங்களமயமாக்கப்படுவதன் ஊடாகவும் கொக்கட்டிச்சோலை படுகொலைகள் போன்ற படுகொலைகள தொடர்ச்சியாக நடைபெற்ற இனக்கலவர
படுகொலைகள் என பலவழிகள் ஊடாகவும்.
இது நடந்துகொண்டிருக்கின்றது. அதில் முக்கியமாக 1983 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசாங்கம் கலவரக்காரர்களுக்கு வழங்கிய வாக்குப் பதிவேட்டு
பதிவு விபரங்களின் மூலம் தமிழர்கள் அடையாளப்படுத்தப்பட்டு நடைபெற்ற
கறுப்பு ஜூலை படுகொலைகள் என இவை யாவுமே தமிழருக்கு எதிராகத் திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும்.
அதன் பின் 2009 வரை போர் என்ற போர்வையில் குண்டு வீச்சு மூலமும், எறிகணைத் தாக்குதல்கள் மூலமும், நேரடியான துப்பாக்கிச் சூடு, கிளைமோர் தாக்குதல்கள்
மூலமும் நடைபெற்ற படுகொலைகள் வெள்ளை கொடியுடன் சரண் அடைந்தபோது நடந்த படுகொலைகள், திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள்;, 2009 இற்குப் பின் தொடர்ச்சியாக நடைபெறும் பலவிதமான, காணி
அபகரிப்புகள் என்பன பொன்ற இவை யாவும் எம்மால் சாட்சியங்களாக சர்வதேசத்துக்கு முன் வைக்கப்படவேண்டியவை.
இன்று, கோத்தபாய ராஜபக்சாவின் SLPP கட்சியின் பாராளுமன்ற வாக்குகள் மூலம். ஜனாதிபதியாகியிருக்கும் ரணில் விக்ரமசிங்கா தமிழர்களின் பூர்வீக
பிரதேசமாகிய வடக்கு- கிழக்கை பிரித்து தமிழரின் பூர்வீக அடையாளங்களை அழிக்கமுற்படுவது திருகோணமலை பிரதேசத்தின் பெரும் நிலப்பகுதியைப்

பிரித்து பொலநறுவை மாகாணத்துடன் சேர்க்கும் செயல்திட்டங்கள் முன்னெக்கப்படுவது என பலவழிகளில் திட்டமிட்டு இனவழிப்புச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக
பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேசம். இன்று தமிழர்களின் பூர்வீக பிரதேசத்தை துண்டாடும் செயல்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில் 46-1 மனிதவுரிமை சபை பிரேரணையில் சாட்சியங்களை பதிவும் செய்து அதை மனிதவுரிமை சபையில் பாதுக்காக்கும். வருங்காலத்தில் ஒரு விசாரணை நடைபெறும் போது அந்த விசாரணைக்கு
இந்த சாட்சியங்கள் உதவும் என்ற நோக்கத்துடன் இந்த வரைபு செய்யப்பட்டது.
ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபை OISL விசாரணையின் போது, 21 பெப்ரவரி 2002 முதல் 15 நவம்பர் 2011என்று கால எல்லைகள் வரையறுக்கப்பட்டுவிசாரணை செய்யப்பட்டது. 46-1 பிரேரணையின் மூலம்; முன்வைக்கப்பட்ட 20000 சாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும், சாட்சியங்களை விசாரித்து பதிவுகளை மனிதவுரிமை சபை காரியாலயம் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டது.
புலம்பெயர் கட்டமைப்புகள் பல சரியான முறையில் விசாரணைகள் செய்யப்படவேண்டும் என்று இணைக்கூட்டு நாடுகளுடனும்; மனிதவுரிமைசபை உயர் ஸ்தானிகருடனும் விசாணை அதிகாரிகளுடனும் பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர். விசாரணிக்குரிய கால எல்லைகள் 1948ல்
இருந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம்.
இன்று உருவாக்கப்பட்டு இருக்கும் விசாரணைக்குழு முன்வைக்கப்படும் சாட்சியங்களை எந்த கால எல்லை நியதிகளும் இல்லாமல் தாம் பதிவு செய்வதாக கூறி இருக்கிறார்கள்.
இன்று சர்வதேச அமைப்பில் எமது சாட்சியங்களை எவ்வாறு நாம் 2014 ஆண்டு பதிவு செய்தோமா, அதேபோன்று 1983 யில் பாதிக்கப்பட்டவர்கள், அதற்;குமுன் பாதிக்கப்பட்டவர்கள், என்று காலவரை அற்ற முறையில் சாட்சியங்களை சேகரிக்க கூடிய சூழல் உள்ளது.
இந்த சூழலில் இந்த இனப்படுகொலையில் சாட்சியங்களாக இருக்கும் நாம் -எமக்கு ஏற்பட்ட பாதிப்பை, எம்மிடம் இருக்கும் சாட்சியங்களை பதிவு செய்து வைக்க வேண்டும். கொக்கட்டிச்சோலை படுகொலையின் சாட்சியம்
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற படுகொலையும் கிராம இடப்பெயரவும்;

11983இல் நடைபெற்ற இனப்படுகொலையும், பொருளாதார இழப்பும் என அனைத்தையும் நாம் சாட்சியங்களாக பதிவு செய்ய வேண்டும்.
இன்று இலங்கை அரசு பெருமம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்தாலும், தமிழருக்கு எதிரான இனஅழிப்பு பல வித முறைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த சூழலிலேயே. நீங்கள் அனுபவித்த பார்த்த இழந்த விடயங்களை சாட்சிகளாக பதிவிடும் படி உங்களிடம் நாம் அழைப்ப விடுகின்றோம்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

தமிழீழ மக்கள் பேரவை -பிரான்சு
தொடர்புக்கு : 06 52 72 58 67

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here