நீண்ட இடைவெளியின் பின் எள்ளங்குளம் துயிலுமில்ல சிரமதானப் பணிகள்!

0
192

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இராணுவ முகாம் அமைக்கபட்டு இருப்பதால் அதற்கு முன்னால் இருக்கும் காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான சிரமதான பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டு வருகின்றது.

சிரமதான பணிகளை மேற்கொள்ளும் போது இராணுவத்தினர் அச்சுறுத்தும் முகமாக நோட்டமிடுவதும்,தடுப்பதற்கான வழிமுறைகளை திட்டம் தீட்டுவது போல் தெரிகிறது என அங்கு பிரசன்னமாயிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

எந்த தடைகள் வரினும் இம்முறை எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நடை பெறும் என கஜேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here