விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
159

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில்  மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் தேதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணி குழுவினரால் துயிலும் இல்ல வளாகம் சிரமதானம் செய்கின்ற வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் நலம் விரும்பிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டு இந்த சிரமதான பணியை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here