ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை மாய்த்த தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை யாழ். பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள் சிலர் அங்கு பிரத்தியேகமான இடம் ஒன்றில் திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது