
அகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா தனது கோரமுகத்தைக் காட்டியது. நல்லூரில் 15.09.1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் ஒரு துளி நீர் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் அந்த தியாக வேள்வியில் மெழுகாய் உருகி தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிடத்தில் 15-09-2022 அன்று தொடங்கியது அத்துடன் பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியும் அதே நாளில் பொத்துவிலில் ஆரம்பமாகியது.

பத்தாம் நாளான இன்று (24.09.2022) பருத்தித்துறையை வந்தடைந்தது தியாக தீபத்தின் ஊர்திப்பவனியானது அங்கு அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அண்ணாவின் தூபியடியில் நினைவு வணக்கம் நிகழ்வு நிறைவடைந்த பின் கடற்கரை வழியாக வல்வெட்டித்துறை நோக்கி சென்று சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் சென்றுகொண்டிருக்கின்றது.









