யா.நாழ்வாந்துறை பகுதியில் இடம்பெற்ற குழு மோதலை தொடர்ந்து அப்பகுதியில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய சென்.மேரிஷ் அணி நாவாந்துறை சந்திப் பகுதியில் நின்று தமது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியிலுள்ளவர்களுக்கு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்.மேரிஷ் அணியினருக்கும் இடையில் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் கற்கள்,போத்தல்களை கொண்டு சண்டையிட்டதில் நாவாந்துறை பகுதியே பெரும் போர்க்களமாக காட்சியளித்தது.
அப்பகுதியிலுள்ள வீடுகள்,கடைகள் எல்லாம் அடித்து நொருக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். .
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்.மேரிஷ் அணி மற்றும் சென்.நீக்கிலஸ் அணிகளுக்கிடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை தொடந்து வருவதாக தெரிவிக்கப்படு்கிறது.
இதேவேளை இன்று காலை கடற்றொழிலுக்கு சென்ற சென்.நீக்கிலஸ் ஆதரவு தொழிலாளிகள் மீது சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் வைத்து 20பேர் கொண்ட சென்.மேரிஷ் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சென்.நீக்கிலஸ் ஆதரவாளர்கள் அறுவர் காயமடைந்தனர்.