யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நீதி கோரி போராட்டம்!

0
72

முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றிரவு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.இரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க எடுக்கும் முயற்சிகள் மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு போலீசார், நேற்று மாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.

பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு பொலிசார் கைது செய்திருந்தனர்.மேலும் பலரை கைது செய்ய முல்லைத்தீவு பொலிசார் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர்.

தமது போராட்டத்தின் தொடர்ச்சியாக பேரணியொன்றை நடாத்தியதுடன் வீதியை வழிமறித்து போராட்டத்திலும் குதித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here