திலீபனண்ணாவின் இலட்சியம் வெற்றிபெற ஒன்றிணைவோம்!

0
204

dcp527666767676-2மீண்டும் மீண்டும் ஏகாதிபத்திய நாடுகளின் அழுத்தங்களுக்குள் நசுங்கி எமக்கான சுதந்திரத்தை இழந்து நிற்கின்றோம். நீதிவேண்டி நாம் எழுகின்ற போதெல்லாம் அதனைப்பெற்றுக்கொள்ள முடியாதவாறு அவைகளின் இராஜதந்திர நகர்வுகள் அமையப்பெறுகின்றன. இதற்கான அடிப்படைக்காரணம் எமக்கென்று ஒரு நாடு அங்கிகரிக்கப்பாடாததுதான். ஒரு இனத்திற்கே உரித்தான தாய்நிலம், தாய்மொழி, சுயமான கல்விச்செயற்பாடு, கலைபண்பாடு போன்றன எம்மிடமிருந்தும் எமக்கென்று ஒரு தேசத்தை நாம் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கவில்லை. எமக்கான தேசத்தினை மீட்டெடுக்கவும் சுபீட்சமான வாழ்வை நிலை நிறுத்தவும் நாம் போராடினோம், போராடிக்கொண்டிருக்கின்றோம். இனிமேலும் போராடுவோம்.

மிகஇளம் வயதிலேயே இந்திய வல்லரசின் சூழ்ச்சிகளையும் இலங்கை அரசின் இனவெறித்தனங்களையும் உடைத்தெறிய திலீபனண்ணாவால் முடிந்தது. அவர் மாணவசமூகத்திலிருந்து புறப்பட்டுவந்து ஒரு பெரும் மாற்றத்துக்கு வித்திட்டவர். இளையோர் மத்தியில் தெளிவுடன் கூடிய தேசப்பற்றை வளர்க்க அரும்பாடுபட்டவர்.

இன்றைய இந்த இக்கட்டான சூழ்நிலையையும் இளையவர்கள் சரியாக எதிர்கொள்ளவேண்டும். தமக்கேயான துடிப்புடனும் வேகத்துடனும் செயற்பட்டு உலகம் எம்மீது காட்டும் பாரபட்சத்தினை மாற்றியமைக்க முன்வரவேண்டும். குறிப்பாக, மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனுடன் கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களை உடைத்தெறியவேண்டும். சுயநிர்ணய உரிமையுடன், சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க எழுச்சிகொள்ளவேண்டும். இதன் மூலம் திலீபனண்ணாவின் கனவு நிச்சயம் நனவாகும்.

கலைமகள்
24.09.2015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here