வெல்லுபிட்டிய போபெத்த தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புக்களுக்குள் அத்துமீறி உட்புகுந்த சிங்களவர் அங்குள்ள அப்பாவித் தமிழ் தோட்டத் தொழிலாளிகளை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வருடாந்த தேர்த் திருவிழாவினை முன்னிட்டு கரகம்பாலிக்க ஆற்றங்கரைக்கு பெரும்பாலான தோட்டத்திலுள்ள ஆண்கள் இளைஞர்கள் சென்ற வேளையில் சம்பவத்தினம் இரவு 10 மணியளவில் இனவெறிகள் தோட்டத்திற்குள் புகுந்து அப்பாவி மக்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் தோட்டத் தொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனை கேள்வியுற்ற கரகம்பாலிக்க சென்ற தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீண்டும் தோட்டத்திற்கு வந்து தோட்டத் தொழிலாளியை தாக்கியதாக கூறப்படும் ஒருவரை தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தோட்டத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் தேர்த் திருவிழா நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. எனினும் தோட்ட மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
இத் தோட்டத்திலுள்ள ஆலய பிரதம குழுக்களுக்கு தங்குவதற்கு தனியான வீடொன்று தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது. அதற்கு சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சிலரே இத் தோட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.