தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 14 வது நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்!

0
64

கடும் காற்று மற்றும் கொட்டும் மழையிலும் 14ம் நாளாக (15/09/2022) தொடரும் ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

நெதர்லாந்தில் ஆரம்பித்து 5 நாடுகளை கடந்து தற்போது  சுவிஸ்  நாட்டில் ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பெரும் இயற்கையின் கடுமையான கால நிலையிலும் கொட்டும் மழை மற்றும் குளிர் காற்றிலுமாக சவால் நிறைந்த புவிச்சூழலிலும் இவ்வறவழிப்போராட்டம் பயணிக்கின்றது. 

நேற்று (15/09/2022)  காலை தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவோடு அகவணக்கம் செலுத்தி தொடர்ந்த ஈருருளிப்பயணம்  சுவிஸ் ,பேர்ன் மாநிலத்தினை இயற்கையோடு போராடி அண்மித்தது . சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என இடித்துரைத்தபடி இப்பயணம் பல அரசியற் சந்திப்புக்களை மேற்கொள்கின்றது. 

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டம்”

– தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here