தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும் ICC!

0
94

சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டும், ICC அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனும்  மனித உரிமைகள்  உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்க தொடரும் 10ம் நாள் அறவழிப் போராட்டம்.

கடந்த 2021 தை மாதம் ஐக்கிய நாடுகள் அவையின்  மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மதிபிற்குரிய பசுலேட்  அம்மையார் அவர்கள் கூறப்பட்ட கருத்திற்கு “ தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும்”  இக் கருத்தை  இக் கூட்டத் தொடரில் நடைமுறைப் படுத்த வலுச்சேர்க்க அனைத்து தமிழ் உறவுகளும் போராட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் போராட்டங்கள் இந்தக் கோரிக்கையில் ஒரு சேர் புள்ளியில் சந்திக்க வேண்டும். அவை எமக்கான இலக்கான “சுதந்திர தமிழீழமும் , சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொண்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே..  ICC ஆகும்.
சவால்கள் வழி நெடுகிலும் இருப்பினும் உடல் உபாதைகள் தாங்கி விடுதலைச் செய்தியினை விட்டுக்கொடுப்பின்றி இடித்துரைக்கப்படுகின்றது இப்போராட்டம் மூலமாக. எதிர்வரும் 51வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் அறிந்த எம் உறவுளே, உங்கள் நாடுகளில் இந்தப் போராட்டம் பயணிக்கையில் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற தவறாதீர்கள். இது காலத்தின் கட்டாயம்.


“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
– தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணா.

https://www.sarreguemines.fr/articles/10-communique/817-accueil-de-la-caravane-tamoule-a-sarreguemines

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here