வட மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள், வடக்கு முதல்வர் மற்றும் மாகாண சபையினருடன் முரண்பட்டுள்ளனர்.
வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் நடைபெற்று வரும் நிலையில், வடமாகாண சபையை முற்றுகையிட்டு, வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இன்றைய அமர்வில் இது குறித்து பேசப்பட்டதோடு, இன்னமும் தமக்கு ஒரு மாதகால அவகாசம் தருமாறும் அதற்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் முதலமைச்சர் மற்றும் வடக்குமாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு இன்றே தீர்வு வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.