சிறப்படைந்த வரலாற்று சிறப்புமிக்க நல்லூரான் தேர்த் திருவிழா!

0
201

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று 25.08.2022 வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனை மெய்யுருகி வணங்கி நின்றதைக் காணமுடிந்தது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here