பிரான்சில் தமிழீழ அணி மற்றும் காஷ்மீர் அணி மோதிய உதைபந்தாட்டம் சமநிலையில்!

0
150

கடந்த 09.08.2022 அன்று சேர்ஜிபொந்துவாஸ் (95 மாவட்டத்தில் ) பலநாடுகளில் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களைக்கொண்ட தமிழீழ அணிக்கும், பிரான்சு முன்னணிக் கழக வீரர்களைக்கொண்ட தெரிவு அணிக்கும் மாலை 20.00 மணிக்கு நட்புரீதியான உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில்
கடந்த 11.08.2022 வியாழக்கிழமை மாலை சேர்ஜிபொந்துவாஸ் ( 95) மாவட்டத்தில்

தமது தேசவிடுதலையின் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் காஸ்மீர் நாட்டுக்கும், தமிழீழ தேசத்துக்குமான சிநேகபூர்வமான உதைபந்தாட்டப்போட்டி மாலை 7.30 மணிக்கு Stade Salif keita avenue de la plain des sports 95800 cergy என்னும் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றத சமநிலையில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை சுவிஸ் தமிழர் இல்லப் பொறுப்பாளர் ..திரு.மதியழகன் அவர்கள் ஏற்றிவக்க , பிரெஞ்சு தேசத்தின் தேசியக் கொடியை சேர்ஜி தமிழ்ச்சங்க உப செயலாளர் திரு. விஜயன் அவர்கள் ஏற்றிவைக்க, காஷ்மீர் தேசத்தின் கொடியை அதன் பிரதிநிதி திரு. முகமட் இஸ்றாக் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தோடு அறிவுறுத்தல்களோடும் போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.

இதில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு .தமிழர் விளையாட்டுத்துறை, ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் போன்றவற்றின் உறுப்பினர்கள் மக்கள் கலந்துகொண்டு இப்போட்டி நிகழ்வில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு உற்சாகத்தை வழங்கியிருந்தனர்..
நன்றி: ஊடகப்பிரிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here