ஜெனிவாவில் மீண்டும் எழுச்சிகொண்ட புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள்!

0
385

சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நேற்று 21.09.2015 திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் முடிவடைந்த பேரணியைத் தொடர்ந்து, அங்கு மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து சுடர்வணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றதையடுத்து, உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனைத்துக் கிளைகளினதும் பொறுப்பாளர்கள் மற்றும் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் குறித்த உறுதிப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைகளை வழங்கியிருந்ததுடன், பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரின் நாடகமும் இடம்பெற்றிருந்ததுடன், வெளிநாட்டு பிரமுகர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தது.
கடந்த 31 ஆம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளி பயணத்தை மேற்கொண்ட உணர்வாளர்களும் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உரிமைக்குரலை ஒலித்தனர்.
நிகழ்வின் நிறைவாக பிரகடனம் வாசிக்கப்பட்டது. தேசியக்கொடி இறக்கப்பட்டதும், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்தி இப்பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.DSCN0048

DSCN0050

DSCN0051

DSCN0052

DSCN0053

DSCN0054

DSCN0055

DSCN0059

DSCN0061

DSCN0063

DSCN0064

DSCN0065

DSCN0066

DSCN0067

DSCN0068

DSCN0069

DSCN0071

DSCN0075

DSCN0076

DSCN0077

DSCN0081

DSCN0082

DSCN0085

DSCN0087

DSCN0090

DSCN0091

DSCN0093

DSCN0094

DSCN0095

DSCN0098

DSCN0099

DSCN0101

DSCN0102

DSCN0103

DSCN0107

DSCN0109

DSCN0113

DSCN0120

DSCN0121

DSCN0122

DSCN0123

DSCN0126

DSCN0128

DSCN0131

DSCN0134

DSCN0136

DSCN0139

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here